Showing posts with label Action. Show all posts
Showing posts with label Action. Show all posts

Thursday, November 28, 2013

வட்டாரம் (2006)



பழிவாங்குதலில் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. பழிவங்கும் உணர்ச்சி ஒரு இயல்பான உடனடி உணர்ச்சி என்கிறது மகாபாரதம் ஆனால் அதை ஆற அமர திட்டமிட்டு செய்வதில் கூடுதல் ஆனந்தம்தான். வஞ்சிக்கப்பட்டவர்க்கு தன் ஏதிரிகளை ஒன்றன்பின் ஒன்றாக களையறுப்பதுதான் கிடைக்கும் ஒரே ஆறுதலாக இருக்கக்கூடும்.

பர்மா (ஆர்யா) ஒரு சிறு, துப்பாக்கி கடத்தல்காரன். தமிழ் எழுத படிக்க தெரியாது, துப்பாக்கிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்காகவே ஆங்கிலம் கற்றுக்கொண்டவன் (ஏனென்றால், தமிழில் அப்படிப்பட்ட புத்தகங்கள் வருவதில்லை).  அவனின் சிறு வயதிலே அவன் தந்தை தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பொய் குற்றம் சாட்டப்பட்டு அவமானப்பட்டு இறக்கிறார்.  அவர் எஜமானர் குருபாதம் (நெப்போலியன்), பல தொழில் செய்யும் சமூக விரோதி.  பர்மாவுக்கு அவர்பால் ஒரு ஈர்ப்பு.  தானும் ஒரு நாள் குருபாதம் போல் வளரவேண்டும் என்று அவரிடமே வேலைக்கு சேர்கிறான்.  படிப்படியாக குருபாதத்திடம் செல்வாக்குப் பெற்று, தன் கனவிற்கு குறுக்கே வருவோரை வீழ்த்தி தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குகிறான்.

"வட்டாரம்" ஒரு மிக சாதரணப் படம்தான்.  ஆனால், ரசிக்கவைக்கும் திரைக்கதையாலும், முக்கிய கதாப்பாத்திரங்களின் இயல்பான நடிப்பாலும் மீண்டும் மீண்டும் அலுப்பு தட்டாமல் பார்க்கவைக்கிறது.  அடிமட்ட அடியாளாக சேரும் பர்மா, குருபாதத்தின் நம்பிக்கையைப்பெற பல சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக குருபாதத்தின் நீண்ட நாள் வலது கையான அயிராவணம் (என்ன பெயரோ?) பர்மாவை வெறுக்கிறார். பல அவமானங்களை, பழிகளை, சந்தித்தாலும், சற்றும் அசைந்துகொடுக்காமல், மெல்ல மெல்ல குருபாதத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி பிறகு தன் பழிவாங்கலை துவக்குகிறான்.  தன் எதிரியை ஒருபக்கம் ரசித்துக் கொண்டே மறுபக்கம் அவருக்கு குழி பறிக்கும் காட்சிகள் மிக அருமை.

பரத்வாஜின் இசை இந்தப் படத்திற்கு பலம்.  "மகாகவி காளிதாஸ்" படத்தின் "யார் தருவார் இந்த அரியாசனம்" என்ற பக்திப் பாடலை இந்தப் படத்தில் இடை இடையே பர்மாவின் எண்ணவோட்டத்திற்கு தகுந்தவாறு, அவனின் வளர்ச்சியைக் குறிக்கும் பாடலாக பயன்படுத்தி, அப்போதெல்லாம் குருபாததின் நாற்காலியை காண்பிப்பது அற்புதம்.

ஆர்யாவின் உணர்ச்சியற்ற, அலட்ச்சிய நடிப்பு, "ஓரம்போ"வை போல் இந்த படத்திற்கும் ஏக பொருத்தம்.  நெப்போலியன், வழக்கமான வேட்டி, அரிவாள் இல்லாமல் கோட்டும், பூட்டும், தலைமுடி கலரிங்கோடு ஒரு பந்தாவான தோற்றம்.  யாரும் மற்றவர் காலைப் பிடித்து வாழ்வதை விரும்பாதவர். சாகும் தருவாயிலும், காலைப் பிடித்தால் உயிர் பிழைக்கலாம் என்ற என்றபோதும், தன் கொள்கையில் மாறாமல் மிளிர்கிறார். தன் குருநாதர் பாலச்சந்தரின் வித்தியாசமானப் பொருட்களைக் காண்பிக்கும் பாணியை மட்டுமே கொண்டிருந்தாலும், திரைக்கதையிலும், இயக்கத்திலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் இயக்குனர் சரண்.

அப்படி ஒன்றும் அட்டகாசமாக இல்லையென்றாலும், பர்மாவின் செயல்முறைகள் சில "அட" ரகம்.  Alfred Hitchcock குறிக்கும் Refrigerator Movies (பார்க்கும்போது சுவாரஸ்யமாகவும், பார்த்தப்பின்னர் அசட்டுத்தனமாகவும் தோன்றும் படங்கள்) வரிசையில் "வட்டாரம்" இடம்பெற தகுதியுடையது.

Monday, November 25, 2013

Assault on Precinct 13 (2005)

We all heard about opportunistic political alliances.  In fact every election in India is riddled with such a mockery of democracy.  But, this is a new kind of alliance.  A few cornered cops strike an alliance with their own prisoners to face a bunch of corrupted cops who are willing to go to any extent to save their asses.

"Assault in Precinct 13" happens on a new year eve.  The sergeant is a weary detective who has moved to a desk job to avoid making decisions that had killed his comrades in action.  When everyone has taken a day-off on the occasion, in his station, he now has a sexy secretary, a soon-to-be retired cop, his shrink on whom he has a crush.  A bad weather brings a prison transit van to temporarily halt at this police station.  The problem is that among the prisoners, we have a gangster cum cop killer who pose a great threat to whomsoever has him in captivity.

Soon, there is an assault launched into the police station.  The sergeant and others believe that this the work of the gangster's goons trying to release him.  But, when they realize that the target of attack is none other other than the gangster himself, they get confused.  Slowly it dawns on them that the attackers are also cops with stained hands.  If the gangster talks, they all has to accompany him to prison.  The sergeant's team is outnumbered and the only way to survive is to join hands with the prisoners and take on the trigger happy corrupted cops.

"Assault..." kept me guessing till the end.  Not whether justice will prevail because I knew it will.  I was looking for the typical talking-bad guy at the end, who even with a gun in hand will ramble long enough to be over-powered by somebody.  But, it didn't happen.  When the bad guy gets a chance, he never misses it.  There are some characters that wont normally die in these kind of movies.  But, this film kills whoever makes the wrong move.  I can sit back and enjoy these kind of movies without much problems

Friday, November 22, 2013

End of Watch (2012)



Two cops, their camaraderie, their personal relationships, their daily patrolling and their adventures form the major chunk of "End of Watch".  Beat cops on patrol are always in the verge of a death because their dangers are lurking behind seemingly harmless situations.  It could be a simple door check for a complaint on a noisy neighbor, but who knows what the neighbor is capable of?  I was never able to predict which scene would turn violent and which one would be normal.

On on of their typical day on road, they accidentally spoil a drug cartels distribution plan.  Since they are smarter, they sense something big is going on and become over-zealous and cross the line to do some detective work as well.  Now the drug mafia wants them dead.  With valor as their companion, the duo goes on doing their duty even ready to pay the ultimate price.

I hate hand-held scenes and unfortunately this movie is shot mainly using this technique.  But I have to agree that it gives a sense of being there and experiencing real events.  I also liked the car mounted and gun mounted camera usage.  On the flip side sometimes, I don't know whats happening.  Nevertheless, I was drawn into the movie and the thrills it provided.

Some scenes are gruesome and there is a shocking climax too.  But, everything fitted aptly for a good cop crime action film